ரூ.97ஐ தாண்டியது பெட்ரோல் விலை: விரைவில் ரூ.100ஐ தொடுமா?
தமிழகத்தில் இன்றும் அதிகரித்தது பெட்ரோல் டீசல் விலை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை அதிகரித்து வருவது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து ரூ.97.19 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து முதன்முதலாக சென்னையில் 97 ரூபாயை பெட்ரோல் விலை தாண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதேபோல் டீசல் விலையும் 27 காசுகள் உயர்ந்து 91.42 என்ற விலையில் ஒரு லிட்டர் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.