திமுகவினர் ஆச்சர்யப்படும் வகையில் அதிமுகவினர் ஊழல்- தினகரன்
இன்றி பிரசாரம் மேற்கொண்ட டிடிவி. தினகரன் அதிமுகவையும், முதல்வர் பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, தேமுதிக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.
இந்நிலையில் தேமுதிக, கட்சி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடவுள்ளது.
இன்று அமமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் மேற்கொண்டு மக்களின் வாக்குகள் சேகரித்த தினகரன் அதிமுகவையும், முதல்வர் பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அதிமுகவினரைப் பார்த்து மக்கள் ஏமாந்துவிட வேண்டாம்… திமுகவினரே ஆச்சர்யப்படும் வகையில் அதிமுகவினர் ஊழல் செய்துள்ளனர். முதல்வர் பழனிசாமி செய்த துரோகச் செயலுக்கு பெயர் ராஜதந்திரமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது, சசிகலா மற்றும் தினகரனின் தலையீட்டில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.