1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (09:36 IST)

தமிழகத்தில் நிலச்சரிவு ஏற்படமால் இருக்க டெக்னிக்கல் துறை சார்ந்த அதிகாரிகள் வயநாடு சென்று ஆராய இருக்கிறார்கள் -வீட்டுவசதித்துறைஅமைச்சர் முத்துசாமி!

கோவையில் யானை தாக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு நிவாரண தொகை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி.....
 
கோவையில் யானை வழித்தடத்தில் சென்ற பாஸ்கர் என்பவர் யானை தாக்கி  காயம் அடைந்து உள்ளதாகவும்,
கால் இரண்டும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அவருக்கு   சிறப்பு சிகிச்சை கொடுக்க பட்டு வருகிறது.முதல்வர் உத்தரவின் பேரில் அவருக்கு நிவாரண தொகை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
 
மேலும் யானை வழித்தடத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனக்கேட்டுக்கொண்ட அவர்,யானை - மனித மோதல்களை தடுக்க துறை சார்ந்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும்,
அதேபோல் வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
விரைவில் கோவை ,ஈரோடு பகுதியில் யானை - மனித மோதல்களை தடுக்க வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்கதாக தெரிவித்த அமைச்சர் முத்துசாமி,
நிலச்சரிவு நடந்த வயநாடு பகுதியில் நிலைமை சரியான பிறகு, இன்னும் 10 நாளில் தமிழகத்திலிருந்து  டெக்னிக்கல் துறை சார்ந்த  அதிகாரிகள் அங்கு  சென்று எதனால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது என்பதை ஆராய இருப்பதாகவும்,
வயநாடு சம்பவத்தை உதரணமாக வைத்து கொண்டு யானை வழிதடங்கள் -   நிலச்சரிவு பாதிக்கும் இடங்களை ஆராய்ந்து தமிழகத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமலும் மக்கள் பாதுகாக்க இருக்கும் வகையில் தேவையான  நடவடிக்கைகள் எடுக்கப்படும்.எனத் தெரிவித்தார்.