இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பு: தரவரிசை பட்டியல் எப்போது?
இளநிலை கால்நடை படிப்புக்கான தரவரிசை பட்டியல் எப்போது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 கால்நடை மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கால்நடை மருத்துவ படிப்புகள் உள்ளன.
அதுமட்டுமின்றி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரியில் பிடெக் பால்வளத்துறை தொழில்நுட்ப பட்டப்படிப்பு உள்ளிட்ட ஒரு சில படிப்புகள் நான்கு ஆண்டு கொண்டவையாக உள்ளன.
இந்த நிலையில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, சின்ன சேலம் ,உடுமலைப்பேட்டை, தேனி, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் கால்நடை மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில் இந்த மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://adm.tanuvas.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் தரவரிசை பட்டியல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Mahendran