1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 21 ஜூன் 2017 (15:40 IST)

மேல்மருவத்தூர் அருகே தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து; உயிர்தப்பிய பயணிகள்

விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து மேல்மருவத்தூர் அருகே திடீரென தீப்பிடித்தது. பயணிகள் உடனே பேருந்தில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.


 

 
இன்று காலை விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அரசு விரைவு பேருந்து மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்து அருகே வந்தபோது எஞ்சினில் புகை கிளம்பியுள்ளது. இதைக்கண்ட பேருந்து ஓட்டுநர் அதிர்ச்சியடைந்து பேருந்தை சாலை ஓரமாக நிறுத்த முயற்சித்துள்ளார். 
 
அதற்குள் தீப்பிடித்து மளமளவென எரிந்துள்ளது. உடனே ஓட்டுநர் உள்பட பயணிகள் அனைவரும் பேருந்தை விட்டு குதித்து உயிர் தப்பினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பேருந்தில் பிடித்த தீயை அணைத்தனர். 
 
ஓட்டுநர் சுதாகரிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் விபத்தில் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும்.