வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 12 ஜூலை 2023 (14:22 IST)

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

tnpsc
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு தேதி சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
10000க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கலந்தாய்வில் ஒரு பணியிடத்திற்கு மூன்று பேர் வீதம் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அது குறித்த பட்டியலையும் வெளியிடப்படுவதாகவும் கூறியுள்ளது. 
 
மேலும் கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி மற்றும் விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றும்  தபால் மூலம் அழைப்பு கடிதம் அனுப்பப்பட மாட்டாது என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
 
தேர்வுகளின் சான்றிதழ் சரிபார்ப்பில் திருப்தி இல்லை என்றால் அவர்களின் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran