Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ வெளியீடு.. எந்த இணையத்தில் பார்க்கலாம்?

Written By Siva
Updated: செவ்வாய், 18 ஜூன் 2024 (19:24 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னாடி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது இந்த தேர்வின் ஆன்சர் கீ வெளிவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்சர் கீ மூலம் தேர்வர்கள் தாங்கள் எத்தனை கேள்விகளுக்கு சரியான விடை எழுதி இருக்கிறோம் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
 
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் நடந்த சிலையில் இந்த தேர்வை 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.  சென்னையில் மட்டும் 432 மையங்களில் தேர்வு நடந்தது என்பதும் சுமார் 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி, குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ என்று கூறப்படும் விடைக் குறிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. https://tnpsc.gov.in/english/Tentativesubjects.aspx?key=e3561976-cea2-4f11-bda8-0911fce6b16e என்ற இணையதளத்தில் ஆன்சர் கீ உள்ளதாகவும், இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் ஜூன் 25ஆம் தேதி வரை ஆன்லைனில் தஙக்ள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால்!... ஈரான் கடும் எச்சரிக்கை!...

தமிழக எம்.எல்.ஏக்களிடம் எத்தனை பேரிடம் கார் இல்லை.. கட்சிவாரியான தகவல் இதோ...

20 ரூபாய் லஞ்சம் .. 30 வருடங்கள் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கு.. ஆச்சரியமான தீர்ப்பு..

விஜய் டிவி புகழ் டிஜே பிளாக்கிற்கு திருமணம்.. மணமகள் ஒரு டாக்டரா?

POCO M8X 5G ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யும் Xiaomi!.. விலை என்ன தெரியுமா?...

அடுத்த கட்டுரையில்
Show comments