Daily Horoscope
✕

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. தேர்வு தேதி என்ன?

Written By Mahendran
Updated: வெள்ளி, 21 நவம்பர் 2025 (12:04 IST)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 1 மற்றும் 1ஏ பதவிகளுக்கான குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது.
 
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 15ஆம் தேதி நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வுகள், சென்னையில் மட்டும் டிசம்பர் 1 முதல் 4 வரையிலும், டிசம்பர் 8 முதல் 10 வரையிலும் முற்பகலில் நடைபெறவுள்ளன.
 
தேர்வுக்கூட நுழைவு சீட்டை, விண்ணப்பதாரர்கள் டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in -க்கு சென்று, தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்  மூலம், விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

வைகோ மட்டும் பேசுகிறார்!.. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது அப்செட்டில் விஜய்!..

கூட்டணிக்கு வரோம்!..ஆனா!.. அன்புமணி வைக்கும் டிமாண்ட்!.. யோசிக்கும் விஜய்!..

நதி நீர் பங்கீடு!. சந்திரபாபுவுடன் ஒரு மீட்டிங்!.. ஆந்திரா போகும் முதல்வர் விஜய்!...

சென்னை வரும் ராகுல்காந்தி!.. முதல்வர் விஜய் வீட்டில் விருந்தா?!..

ஹாய் அம்பானி... நீங்கதான் முதலாளி!.. நல்லா சுரண்டுங்க!.. எலன் மஸ்க் கோபம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments