புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 29 டிசம்பர் 2021 (09:27 IST)

35.37 லட்சம் பேர் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியில்லாதவர்கள்: தமிழக அரசு அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று, 5 சவரனுக்குள் வாங்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதும் அதனை அடுத்து ஆட்சிக்கு வந்த பின்னர் அதற்கான நடைமுறைகள் ஆரம்பம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் நகைகடன் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நகை கடன் தள்ளுபடி செய்ய கோரி விண்ணப்பித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 48.84 லட்சம் பேர் என்றும் அதில் 35.37 லட்சம் பேர் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதி இல்லாதவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 75% பேர் அதற்கு தகுதி இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.