1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (12:09 IST)

எதிர்ப்புகளை மீறி பரந்தூரில் விமான நிலையம்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

parandhur
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசு திட்டமிட்டுள்ள நிலையில் பரந்தூரில் உள்ள பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் 
 
அரசியல் கட்சிகளும் பரந்தூர் மக்களுடன் இணைந்து விமான நிலையம் அமைக்கக் கூடாது என போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு விரைவில் விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்கும் படி கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பல்வேறு எதிர்ப்புகளை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் முதல் கட்டமாக இடத்தேர்வுக்கு அனுமதி கோரி டிட்கோ மூலம் தமிழக அரசு விண்ணப்பித்து இருப்பதாகவும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது 
 
இந்த தகவல் காரணமாக பரந்தூரில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Edited by Mahendran