புதன், 1 பிப்ரவரி 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified வியாழன், 29 செப்டம்பர் 2022 (19:32 IST)

ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவீர்களா? அரசுக்கு அண்ணாமலை கேள்வி

தமிழக அரசு  அதிகராரத்தை தவறாக பயன்படுத்துவதாக பாஜக தலைவர் அண்ணாமலை   தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் பொது அமைதிக்கு இடையூறு விளையும் என இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு பல்வேறு மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கு  எதிர்க்கட்சிகளான நாம் தமிழர், புலிப்படை, விசிக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு அளித்து வருகிறது.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ''உங்கள் கொள்கைக்கு ஒத்துவராதவர்களை, ஒதுக்குவதற்கு ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகத்'' தெரிவித்துள்ளார்.

மேலும்,'' காவல்துறை ஊர்வலத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தலாமமே தவிர அனுமதி மறுக்க காவல் துறைக்கு அதிகாரமில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை 9 ஆண்டுகள் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.