வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 ஜூன் 2021 (15:52 IST)

மின்பெட்டி பழுது.. அவசர மின்துறை புகார்கள் 24x7 சேவை மையம்! – முதல்வர் தொடங்கி வைத்தார்!

தமிழகம் முழுவதும் மின்துறை சார்ந்த புகார்களை தெரிவிக்க 24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது முதலாக அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் மின்துறையில் உள்ள சிக்கல்கலை தீர்க்கவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதிய மின் இணைப்பு பேட்டி, மின்பெட்டி பழுது, மின் தடை, தாழ்வாக செல்லும் மின்கம்பி, மின் வயர்கள் அறுந்து தொங்குதல் போன்ற மின்துறை சார்ந்த புகார்கள் அனைத்தையும் தெரிவிக்க முழு நேரமும் செயல்படும் ”மின்னகம்” மின் நுகர்வோர் சேவை மையத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மின்னகத்தின் உதவி எண்ணான 9498794987 என்னும் எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.