வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 25 மே 2017 (13:01 IST)

இனிமேல் மீன்களையும் ஆன்லைனில் வாங்கலாம் - தமிழக அரசு புதிய அறிவிப்பு

மீன்களை பொதுமக்கள் ஆன்லைனில் வாங்கும் புதிய வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


 

 
இந்த திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் “ மீன் உணவு இதயநோய் வராமல் தடுக்கிறது. ஆரோக்கியமான உணவான மீன் உணவுப்பொருள்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவது இன்று முதல் சென்னை மாநகரில் தொடங்கப்பட்டுள்ளது. மீன்கள் மட்டுமல்ல, மீன்கள் சார்ந்த மற்ற பொருள்களை, டெலிபோன் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெறலாம். www.meengal.com என்ற இணையதளம் மற்றும் 044- 24956896 தொலைபேசி எண்ணில் ஆர்டர் செய்யலாம். 10 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு மென்பொருளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையில் 5 மையங்கள் உள்ளன. சென்னை மக்களுக்கு மீன் உணவு வகைகள் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள பகுதிகளுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு ஆர்டர் தரலாம். இதற்கு போக்குவரத்துக் கட்டணமாக, 35 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் டெலிவரி செய்யப்படும். இந்தத் திட்டம் விரைவில், மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும்" என்று அவர் கூறினார்.