செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2024 (08:35 IST)

தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகை எவ்வளவு? தமிழக அரசு இன்று அறிவிப்பு?

ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 ரொக்கம் மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் வரயிறுப்பதை அடுத்து இந்த ஆண்டு பொங்கல் பரிசு அதிகாரித்து வழங்கப்படலாம் என்றும் வழக்கமாக வழங்கப்படும் 1000 ரூபாய்க்கு பதிலாக இந்த ஆண்டு மட்டும் 2000 ரூபாய் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி  பொங்கலுக்கு தேவையான அரிசி, வெல்லம்,  கரும்பு உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பரிசு குறித்த ரொக்க அறிவிப்பு மற்றும் பொருள்களின் அறிவிப்பு இன்று தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை ரொக்கம் 1000 கொடுப்பார்களா அல்லது 2000 கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva