வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 15 அக்டோபர் 2019 (20:35 IST)

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் பொங்கல் பரிசு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இம்மாதம் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் சற்றுமுன் தமிழக அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
 
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33% என்றும், கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் என்றும் தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் என்றும் இந்த போனஸ் அறிவிப்பால் 3,48,503 பேர் பலனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து போக்குவரத்து ஊழியர்கள், மின்சார வாரியர் ஊழியர்கள், வனத்துறை ஊழியர்கள் ஆகியோர்களுக்கு விரைவில் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது