திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (20:11 IST)

2ஆம் தலைநகர் குறித்து முதல்வர் பழனிசாமி அதிரடி கருத்து!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இரண்டாம் தலைநகர் குறித்து அமைச்சர்கள் விவாதம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே 
 
மதுரையை இரண்டாவது தலைநகராக வேண்டும் என்று அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து வெல்லமண்டி நடராஜன் என்ற் அமைச்சர் திடீரென மதுரை வேண்டாம் திருச்சி தான் இரண்டாவது தலைநகராக வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் அமைச்சர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதும் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியானதையும் மறக்கடிப்பதற்காக அமைச்சர்கள் வேண்டும் என்றே இரண்டாவது தலைநகர் என்ற புதிய பிரச்சினையை உருவாக்கியதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார். இரண்டாவது தலைநகர் குறித்து அமைச்சர்களின் கருத்துக்கள் அவரவர் சொந்த கருத்துக்கள் என்றும் அது அரசின் கருத்துக்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதனை அடுத்து அரசுக்கு இரண்டாவது தலைநகர் குறித்த எண்ணம் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது