1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2017 (12:16 IST)

என்னது கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழரா? முதல்வர் ஈபிஎஸ் பேச்சால் பரபரப்பு

கம்பராமாயணத்தை எழுதியது யார் என்று கேட்டால் பள்ளிக்குழந்தைகள் கூட 'கம்பர்' என்ற விடையை சரியாக கூறிவிடும். ஏனெனில் அந்த கேள்வியிலேயே கம்பர் என்ற விடை உள்ளது.
 
ஆனால் தமிழகத்தின் முதலமைச்சராகவும், ஒரு தமிழராகவும் இருந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி இன்று நடைபெற்ற ஒரு விழாவில் பேசியபோது கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறியுள்ளார். இதை கேட்டு தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
யாரோ எழுதி கொடுத்ததை பேசினார் என்றாலும் எழுதி கொடுத்தவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை எழுதியது யார் என்பது கூட தெரியாமல் ஒருவர் இருக்க முடியாது என்பதால் முதல்வருக்கு எதிர்க்கட்சியினர்களும் நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.