செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2020 (11:11 IST)

பரவி வரும் புதிய கொரோனா: மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை!

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கடந்த ஒரு ஆண்டாக உலகம் முழுவதும் மனித இனமே ஆபத்தில் இருந்த நிலையில் தற்போது பிரிட்டனில் இருந்து புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது 
 
குறிப்பாக தமிழகம் உள்பட இந்தியாவில் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சற்று முன்னர் தலைமைச் செயலகத்தில் காணொளி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உருமாறிய கொரோனா தமிழகத்தில் பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து வருகிறார் 
 
இந்த ஆலோசனையில் தமிழகத்தில் புதிய வகை கொரோனா நோயை தடுப்பது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும் இதனை அடுத்து மருத்துவ நிபுணர்களிடம் அவர் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மேலும் டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவு உத்தரவை நீடிப்பது குறித்தும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது