Daily Horoscope
✕

அவர் பாஜக வேட்பாளரே இல்ல.. சுயேட்சையா நின்னவர்! – பாஜக தரப்பு விளக்கம்!

Written By Prasanth Karthick
Updated: புதன், 13 அக்டோபர் 2021 (13:36 IST)
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு மட்டுமே பெற்றதாக வைரலான நிலையில் அவர் பாஜக வேட்பாளரே இல்லை என பாஜக தரப்பு விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் பல கட்சிகளும் போட்டியிட்ட நிலையில் பாஜகவும் போட்டியிட்டது. இந்நிலையில் கோனமுத்தூர் ஊராட்சியில் போட்டியிட்ட கார்த்திக் என்பவர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தார். அவர் பாஜக வேட்பாளர் என செய்திகள் வெளியான நிலையில் பாஜக தரப்பில் அதை மறுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் இட்டுள்ள பதிவில் "எவ்வித கட்சி அடிப்படையும் இல்லாத கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்" பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திக் என்பவரை பாஜக கட்சியின் சார்பாக போட்டியிட்டார் என ஊடகங்களும், அறிவாலயம் உடன் பிறப்புகளும் பொய் தகவலை பரப்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்லாம் காட்டு

பிரான்ஸை அடுத்து ஜெர்மனியில் ஜென் சி போராட்டம்.. வன்முறையாக மாறுவதால் பதட்டம்...

மூத்த பத்திரிகையாளரை திருமணம் செய்தார் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா! குவியும் வாழ்த்துக்கள்..

ரூ.3000ஐ தாண்டியது வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: இன்று முதல் அமல்!

வங்கக்கடலில் முரசு புயல்: சென்னைக்கு எவ்வளவு அருகில் வரும்? எங்கெல்லாம் மழை பெய்யும்? முழு விவரம்!

நவம்பர் முதல் வாரத்தில் வங்கி விடுமுறைகள்: வாடிக்கையாளர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments