ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 26 மார்ச் 2017 (15:40 IST)

தமிழக பாஜக தலைவர் தமிழிசை மாற்றம்?: டெல்லியில் தீவிர ஆலோசனை!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை மாற்றம்?: டெல்லியில் தீவிர ஆலோசனை!

தமிழக பாஜக தலைவராக உள்ள தமிழிசை சௌந்தரராஜனை மாற்றும் நிலையில் தற்போது பாஜகவில் உள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் கூறுகின்றன. இதற்கான தீவிர ஆலோசனையில் டெல்லி தலைமை உள்ளதாக கூறப்படுகிறது.


 
 
பாஜகவில் தலைவர் பதவியை மாற்றி அமைப்பது வழக்கமான மரபான ஒன்றுதான். ஆனாலும் உத்தரப்பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததை போல தமிழகத்திலும் பாஜக தலைமையை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
தமிழிசைக்கு மாற்றாக புதிய தலைவராக வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், கே.டி. ராகவன், சீனிவாசன் ஆகியோர்கள் பெயர் டெல்லி தலைமையால் பரிசீலிக்கப்பட்டு விரைவில் புதிய தலைவரின் பெயர் அறிவிக்கப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும் தமிழிசையை மாற்றவேண்டும் என மாநிலத்தின் பல்வேறு கோஷ்டிகளும் மல்லுக்கட்டுவதாக கூறப்படுகிறது. எனினும் விரைவில் இதற்கு முடிவு தெரிந்து விடும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.