ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2019 (17:59 IST)

பிரேமலதா என்ன வருவாய்த்துறை அதிகாரியா? – சீறிய டி.கே.எஸ் இளங்கோவன்

கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிதியளித்தது குறித்து திமுக விளக்கமளிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன்.

தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது திமுக கட்சி தேர்தலின் போது கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதியாக 25 கோடி கொடுத்ததாகவும், அதற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் “திமுக எதற்காக பிரேமலதாவிற்கு விளக்கம் அளிக்க வேண்டும்? அவர் என்ன வருமானவரித்துறை அதிகாரியா?  நாங்கள் செய்த செலவுகள் குறித்த அறிக்கைகளை முறையாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம்.” என்று கூறியுள்ளார்.