சாதி சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர முடியவில்லை: மனவிரக்தியில் மாணவி தற்கொலை..!
சாதி சான்றிதழ் இல்லாததால் கல்லூரியில் சேர முடியவில்லை என்ற மனவிரக்தியில் இருந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் அருகே நடந்து உள்ளது.
திருவண்ணாமலையில் அருகே ராஜேஸ்வரி என்ற மாணவி பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அரசு கலைக்கல்லூரியில் படிக்க விண்ணப்பம் செய்திருந்தார்.
இந்த நிலையில் கல்லூரியில் சேர்வதற்கு சாதி சான்றிதழ் கட்டாயம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் அவரிடம் சாதி சான்றிதழ் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கல்லூரியில் சேர முடியாமல் மன விரக்தியில் இருந்த ராஜேஸ்வரி திடீரென பூச்சி மருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதனை அடுத்து இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மறைந்த மாணவியின் ஜாதி பன்னியாண்டி என்றும் அந்த ஜாதி இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவு செய்யவில்லை என்பதால் அவருக்கு ஜாதி சான்றிதழ் கிடைத்ததில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran