வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 15 மார்ச் 2022 (14:42 IST)

திருவண்ணாமலை கிரிவலத்தில் பக்தர்களுக்கு அனுமதியா?

இந்த மாதம் திருவண்ணாமலை கிரிவலத்தில் பக்தர்கள் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவண்ணாமலை கிரிவலத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து மார்ச் 17, 18 ஆகிய தேதிகளில் பங்குனி மாத பெளர்ணமியன்று நடைபெறும் கிரிவலத்தில் பக்தர்கள் அனுமதி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது