பிளஸ் 2 தேர்வில் 435 மதிப்பெண்கள் பெற்ற மாணவி தற்கொலை.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!
சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான நிலையில் இந்த தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவி ஒருவர் மனவிரக்தி காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூர் அருகே நடந்துள்ளது.
சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு வெளியான முடிவுகள் வெளியான நிலையில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். பிளஸ் 2 தேர்வில் 96 சதவீதத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்ச்தை பெற்றது அடுத்து மாணவ மாணவிகள் தற்போது கல்லூரிகளில் சேர்வதில் மும்முரமாக உள்ளனர்.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறவில்லை என்ற காரணமாக திருவள்ளூரை சேர்ந்த மாணவி ஒருவர் கலந்து சில நாட்களாக மனவிரக்தியில் இருந்து உள்ளார். அவர் பிளஸ் டூ தேர்வில் 600க்கு 430 மதிப்பெண் பெற்றுள்ளார். 500க்கு மேல் அவர் எதிர்பார்த்ததாகவும் அவர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென குறைந்த மதிப்பெண்ணால் அதிருப்தி அடைந்த மாணவி இன்று தற்கொலை செய்து கொண்டதை அடுத்த போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran