Daily Horoscope
✕

ஏடிஎம் கொள்ளை முயற்சி; உடைக்க முடியாததால் தூக்கி சென்ற கொள்ளையர்கள்!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (10:05 IST)
திருப்பூரில் ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள் உடைக்க முடியாததால் மெஷினை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் ஒன்று செயல்பட்டுவருகிறது. ஆள் இல்லா நேரத்தில் ஏடிஎம்மிற்குள் புகுந்த முகமூடி அணிந்த கும்பல் ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால் ஏடிஎம் இயந்திரம் உடைக்க கடினமாக இருந்துள்ளது. இதனால் கொள்ளையை கைவிட விரும்பாத அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தையே பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீஸார் சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏடிஎம் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

என்னை பத்தி பேசு.. பெண்களை பற்றி பேசினா சும்மா இருக்க மாட்டேன்!.. தாராபுரத்தில் கொந்தளித்த விஜய்..

கோவை To தாராபுரம்!.. முதல்வர் விஜய் பயணித்த ஹெலிகாப்டர் விலை 50 கோடி!...

இந்த 4 கேள்விக்கு பதில் சொல்லுங்க!.. விஜயிடம் கேள்வியெழுப்பிய முக ஸ்டாலின்...

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை குறை சொல்பவர்கள் தோத்தாங்குளிகள்: நடிகை கஸ்தூரி

அதிமுகவில் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ...

அடுத்த கட்டுரையில்
Show comments