Daily Horoscope
✕

இன்று முதல் திருப்பதி செல்லும் முக்கிய ரயில் ரத்து.. பயணிகள் அதிருப்தி..!

Written By Siva
Updated: செவ்வாய், 11 ஜூன் 2024 (09:23 IST)
திருப்பதி முதல் காட்பாடி வரை இயங்கும் மெமு ரயில் இன்று முதல் ஜூன் 30-ம் தேதி வரை ரத்து என தென்னக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

திருப்பதி - காட்பாடி இடையிலான ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதனை அடுத்து திருப்பதி முதல் காட்பாடி வரை செல்லும் மெமு ரயில் மற்றும் மறு மார்க்கமாக காட்பாடியில் இருந்து திருப்பதி செல்லும் ரயில் ஆகியவை ஜூன் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த இரண்டு நாட்களில் அதிகாலை 3.50 மணிக்கு திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் செல்லும் ரயில் மற்றும் அதிகாலை 4 மணிக்கு சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில் ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

ஒத்துக்கிட்டா இவ்ளோ.. இல்லனா இவ்ளோ வரி!.. இந்தியாவை மிரட்டும் டிரம்ப்...

மேசேஜ் அனுப்பு நேரம் குறிக்கலாம்!.. வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்...

Delimitation மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு? திமுகவின் நிலை என்ன?

விஜய் இன்னும் தூக்கத்திலிருந்து எந்திருக்கல!... உதயநிதி நக்கல்...

குடியுரிமை விவகாரத்தில் டிரம்புக்கு பின்னடைவு.. அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு...

அடுத்த கட்டுரையில்
Show comments