Daily Horoscope
✕

நெல்லை கல்குவாரி விபத்து; இருவர் மீட்பு – மீட்பு பணிகள் தீவிரம்!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 15 மே 2022 (11:19 IST)
திருநெல்வேலி கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். அப்போது திடீரென பெரிய பாறை இடிந்து விழுந்ததில் சுமார் 6 ஊழியர்கள் அதில் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது.

இதுகுறித்து அறிந்த பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பாறைகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய மீட்பு படையும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

இதுவரை இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் பாறைகளில் சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

அதிக நன்கொடை கொடுத்த இந்தியர்களில் முதலிடம்!.. அதானியை தாண்டிய ஷிவ் நாடார்

அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி.. ஸ்டாலின்.. பழனிச்சாமி!.. வைரல் போட்டோ...

தங்கத்தில் கலக்கப்படும் ரீனியம்?.. பொதுமக்கள் உஷார்.. கடும் எச்சரிக்கை....

சென்னையில் இல்லாத கல்யாண மண்டபமா?!.. ஸ்டாலினை விளாசிய வைகோ...

நிறைய கடன் இருக்கு!.. அவமானம்.. அதான் கொள்ளையடிச்சேன்.. நிஷாந்த் வாக்குமூலம்...

அடுத்த கட்டுரையில்
Show comments