ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (14:12 IST)

திருச்செந்தூர் கோவிலில் செல்போன் லாக்கர்; கட்டணம் இவ்வளவா?

Tiruchendhur
திருச்செந்தூர் கோவில் செல்போனை உள்ளே எடுத்து செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் செல்போன் லாக்கர் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் செல்போன்களை எடுத்து செல்ல மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்துள்ளது. இதனால் கோவில் வளாகத்திலேயே செல்போன்களை பாதுகாக்க தனி லாக்கர் அறைகள் அமைக்கப்படும் பணிகள் தொடங்கின.

இன்று செல்போன் லாக்கர்களையும் கோவில் வளர்ச்சி திட்ட பணிகளையும் இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஐகோர்ட்டு உத்தரவின்படி செல்போனை பாதுகாப்பதற்கு தனி லாக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளன. செல்போனை லாக்கர்களில் வைக்க ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் “முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை திருச்செந்தூர் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் இருந்து கோவிலுக்கு அழைத்துவர சிறப்பு வாகனங்கள் இயக்கப்படுகிறது. பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் நவம்பர் மாதத்திற்கு பயன்பாட்டிற்கு வரும்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K