1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (08:41 IST)

இன்று முதல் மூன்று நாட்களுக்கு தரிசனத்திற்கு தடை! – திருச்செந்தூர் கோவில் அறிவிப்பு!

தமிழகத்தில் பிரபலமான அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் மூன்று நாட்களுக்கு தரிசனத்திற்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல காலமாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவில் திறக்கப்பட்ட நிலையில் முதலில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் தரிசன நேரம் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் வார இறுதிகளில் வழிபாட்டு தளங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. அதனால் இன்று முதல் ஞாயிற்றுகிழமை வரை மூன்று நாட்களுக்கு கோவிலில் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.