புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசன நேரம் குறைப்பு: பக்தர்கள் அதிருப்தி!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசன நேரம் குறைக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. குறிப்பாக வழிபாட்டு தலங்கள் வெள்ளி முதல் ஞாயிறுவரை மூடப்பட்டிருக்கும் என்றும் திறந்திருக்கும் நேரங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் இதுவரை அதிகாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர் 
 
இந்த நிலையில் தற்போது அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது