கொடைக்கானலில் வேட்டையாடப்பட்டதா ஆண் புலி?
கொடைக்கானலில், பழம்புத்தூர் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்த புலி, வேட்டையாடப்பட்டதா என்று அப்பகுதி மக்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடைக்கானல் அருகேயுள்ள பழம்புத்தூர் கிராமத்தில் ஆண் புலி ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், கால்நடை மருத்துவரின் உதவியுடன் புலி இறந்து கிடந்த அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தினர்.
இந்நிலையில், பழம்புத்தூர் கிராமத்தில் 2 நாள்களுக்கு முன்னர் மர்மவிலங்கு ஆடு, மாடு, குதிரை போன்றவற்றை புலி தாக்கிக் கொன்றதாக கிராம மக்கள் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதனால், இறந்த புலிக்கு கிராம மக்கள் விஷம் வைத்தனரா அல்லது வேட்டையாடப்பட்டதா என்பது குறித்து வனத்துறையினர் கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்