ரஜினியா? ரஞ்சனியா? – கன்பியூஸ் ஆன துக்ளக் குருமூர்த்தி!
பெரியார் பற்றி பேசியது குறித்து ரஜினி விளக்கமளித்துள்ளதை குறிப்பிட்ட ஆடிட்டர் குருமூர்த்தி ரஞ்சனி என குறிப்பிட்டுள்ளது வைரலாகியுள்ளது.
துக்ளக் 50வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட கழகத்தினர் கூறி வந்த நிலையில் தான் பேசியது சரிதான் என ஆதாரங்களோடு இன்று பேட்டியளித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்தின் இந்த பேட்டியை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ”ரஜினியின் இன்டர்வியூ நடந்துகொண்டிருக்கிறது. பாருங்கள். ரஞ்சனியின் ஆன்மிக அரசியலின் வெளிப்பாடு தான் இது. யாருடைய நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தி இழிவு படுத்துவது தவறு என்பதைத் தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு தமிழகம் நன்றி செலுத்தவேண்டும்” என்று கூறியுள்ளார்.
அதில் ரஜினி என்பதற்கு பதிலாக ஒரு இடத்தில் தவறுதலாக ரஞ்சனி என குறிப்பிட்டுள்ளார். பிறகு அதை ரீட்வீட் செய்து அந்த தவறை அவரே சுட்டிக்காட்டி ரஜினி என குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் முதலில் ரஞ்சனி என குறிப்பிட்டதை தி.க ஆதரவாளர்கள் பலர் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.