செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (21:39 IST)

யானைக்குத் தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டம் ! கலெக்டர் உத்தரவு

கடந்தாண்டு கேரளாவில் ஒரு யானையின் வாயில் பட்டாசு வெடிக்கச் செய்த கொடூரச் சம்பவம் நடந்தது. இதனால் ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சி அடைந்தது.

வனவிலங்குகளைத் துன்புறுத்தக்கூடாது என்று வன அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் எத்தனை கூறினாலும் சிலர் இதைக் கேட்பதேயில்லை.

இந்நிலையில், யானைக்கு தீ வைத்த மற்றொரு கொடூர சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்துள்ள நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

மசினக்குடியில் யானைக்குத் தீ வைத்த வழக்கில் கைதான பிரசாத் மற்றும் ரேமண் ட் ஆகிய இருவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நீலகிரி ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.