Daily Horoscope
✕

PBSS பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்!

Written By siva
Updated: செவ்வாய், 1 ஜூன் 2021 (14:03 IST)
பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ராஜகோபாலனை 3 நாள் காவலில் வைத்து விசாரணை செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
 
ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடைபெற்றதை அடுத்து இராஜகோபாலன் போஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்
 
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி காவல்துறையினருக்கு மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். இதனை அடுத்து இன்று முதல் ராஜகோபாலன் மூன்று நாட்கள் காவல்துறையினரின் கஸ்டடியில் இருப்பார் என்பதும் அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்க போலீசார் தயாராகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

2-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அ, ஆ கூட தெரியவில்லை.. படிக்காமலே பாஸ் நிலைக்கு முற்றுப்புள்ளியா?

திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டி?!... திருமாவளவனை களமிறக்கும் விஜய்?...

வாட்ஸ்அப் மெசேஜை இனி ஷெட்யூல் செய்தும் அனுப்பலாம்.. 10 நிமிடம் முதல் 2 வாரங்கள் வரை ஷெட்யூல் செய்ய வசதி...

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை.. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதா?

ஃப்ளைதுபாய் விமான கவிழ்ப்பு சதி. மாலத்தீவை சேர்ந்த 2 விமானிகள் கைது.. அதிர்ச்சி தகவல்...

அடுத்த கட்டுரையில்