1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 8 ஆகஸ்ட் 2018 (17:30 IST)

இது இன்று எழுதப்பட்ட தீர்ப்பல்ல...அன்றே கருணாநிதியால் எழுதப்பட்டது; இயக்குநர் நவீன்

கலைஞருக்கு மெரினாவில் இடம் எனும் தீர்ப்பு இன்று எழுதப்பட்டதல்ல என்று மூடர்கூடம் படத்தின் இயக்குநர் நவீன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்ட போது தமிழக அரசு முடியாது என்று மறுத்துவிட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
பின்னர் மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து மூடர்கூடம் படத்தின் இயக்குநர் நவீன் தனது டுவிட்டர் பக்கத்தில், கலைஞருக்கு மெரினாவில் இடம்' எனும் தீர்ப்பு இன்று எழுதப்பட்டதல்ல. அது கலைஞர் மாணவ பருவத்தில் கையெழுத்து பத்திரிக்கை துவங்கி முதல் சொல் எழுதியபோது அவரே எழுதிய தீர்ப்பு என்று பதிவிட்டுள்ளார்.