1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 ஆகஸ்ட் 2018 (16:29 IST)

கருணாநிதிக்கு ஒப்பாரி வைத்து பெண்கள் அஞ்சலி - வீடியோ

முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதிக்கு கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 
தி.மு.க தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார். இதையொட்டி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தி.மு.க தலைவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மணவாசி சமத்துவபுரம், மணவாசி, ஆர்.புதுக்கோட்டை, வீரராக்கியம் ஆர்.எஸ். ஆகிய பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் என்று ஏராளமானோர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும், மணவாசி சமத்துவபுரம் பகுதிகளில் பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர். 
- சி. ஆனந்தகுமார்