செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 4 நவம்பர் 2019 (09:32 IST)

தஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு..

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மர்ம நபர்கள் சாணியை பூசி அவமரியாதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டிக்கு அருகே வல்லம் என்ற பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையில் சாணியை பூசி அவமதித்த சம்பவம் நடந்துள்ளது. சிலையை அவமதித்த மர்ம நபர்கள் யார் என்று தெரியவில்லை. மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் ஹிந்து மத அடையாளமான காவி அங்கியுடனும், திருநீருடனும் திருவள்ளுவர் தோன்றுவது போல் ஒரு புகைப்படம் பரவி வந்த நிலையில் தற்போது திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.