தமிழகத்தின் அம்பேத்கர் திருமாவளவன்: சொன்னது யார் தெரியுமா?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் என்று கூறினாலே தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் அவர் ஒரு ஜாதிக்கட்சியின் தலைவர் என்பது தெரியும். ஆனால் திருமாவளவன் ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ மதத்திற்கோ எதிரானவர் அல்ல என்றும், அவர் தமிழகத்தின் அம்பேத்கர் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் பாதுகாப்போம் என்ற மாநாடு திருச்சியில் நடந்து வருகிறது. இதில் சீதாராம் யெச்சூரி, மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், வைகோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் வைகோ பேசியபோது, 'நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் என்றும் பிரதமர் மோடியும், அவது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்றும் கூறினார்.
மேலும் மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் என்றும், வாஜ்பாய்க்கு மாற்று உருவானதுபோல் மோடிக்கு மாற்று நிச்சயம் உருவாவார்கள் என்றும் சீதாராம் யெச்சூரி பேசினார்.