வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (13:35 IST)

தமிழ்நாட்டுக்கென தனிக் கொடி வேண்டும்! – திருமாவளவன் கோரிக்கை!

தமிழகத்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகத்திற்கென பிரத்யேக கொடியை அறிமுகம் செய்ய வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னிந்தியாவில் மொழிவாரியாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகம் பிரிக்கப்பட்ட நாளை மாநிலங்களின் பிறந்தநாளாக அந்தந்த மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. நவம்பர் 1அன்று இந்த மாநிலங்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் ” தென்னிந்திய மாநிலங்கள், மாநிலம் பிறந்தநாளை பூரிப்போடு கொண்டாடி வருகின்றனர். கர்நாடகா மாநிலம் தனி மாநிலக் கொடி ஏற்றி கொண்டாடி வருவதைப் பார்க்கிறோம். எனவே தமிழக அரசு இந்த நாளை கொண்டாடுவதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், தமிழகத்திற்கும் பிரத்யேக கொடியை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.