திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (16:15 IST)

அவர்கள் எல்லாம் திராவிட இயக்கம் அல்ல - விளாசித்தள்ளிய கருணாநிதி

அந்த சிலரை திராவிட இயக்கத்துக்காரர்கள் என்று யாரும் நம்பி விட வேண்டாம் என கருத்து கருத்து தெரிவித்துள்ளார். 
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திராவிட இயக்கத்திற்கு என்று உறுதியான கொள்கைகள் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த கொள்கைகளைச் சொல்லிக் கொண்டு இயக்கத்தை நடத்துகின்றவர்கள் எல்லாம் திராவிட இயக்கத்துக்காரர்கள் என்று யாரும் நம்பி விட வேண்டாம்.
 
உண்மையிலேயே இந்த இயக்கத்தை வழிநடத்திச் செல்பவர்கள், தந்தை பெரியார் காலத்திலே இருந்து இதுவரை இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்கின்ற நாங்கள், ஏன் இந்த இயக்கத்திலே பீடு நடைபோடுகிறோம்.
 
பெருமித நடைக்குச் சொந்தக் காரர்களாக இருக்கிறோம் என்பதையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்த்து, இந்த நடை தொடர, இந்த எண்ணங்கள் மலர, இந்த இலட்சியங்கள் வெற்றி பெற அனைவரும் எங்களோடு இணைந்து பாடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 
இதன் மூலம் நாங்கள் மட்டுமே திராவிடர் இயக்கம் என்று சொல்லிக் கொள்ள உரிமை படைத்தவர்கள் என்று கருணாநிதி விளக்கம் கொடுத்துள்ளார். மற்றவர்களை நம்ப வேண்டாம் என்றும் தனக்கே உரிய பாணியில் விளாசியுள்ளார்.