திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2024 (14:19 IST)

அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்டதும், மகாவிஷ்ணு பேசியதும் தவறு இல்லை..! பிரேமலதா...!

Premalatha
ஜி.எஸ்.டி தொடர்பான அன்னபூர்ணா உரிமையாளர் கேள்விக்கு ஒன்றிய நிதி அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டதும், மகாவிஷ்ணு பள்ளியில் பேசியதும் தவறு இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
சென்னை கோயம்பேட்டில்  உள்ள தேமுதிக அலுவலகத்தில் தேமுதிகவின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், இன்று முதல் தேமுதிக அலுவலகம் கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும் என்றும் அதற்கான பெயர் பலகையை திறந்து வைத்துள்ளோம் என்றும் கூறினார். 

முதல்வர் வெளிநாடு பயணம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், என்னென்ன முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது, எத்தனை பேர் வேலை வாய்ப்பை பெற உள்ளனர் என்பதை வெள்ளை அறிக்கையாக அவர்கள் வெளிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
 
ஜி.எஸ்.டி. குறித்து அன்னபூர்ணா உரிமையாளர் தனது கருத்தை எடுத்துச் சொன்னார், அவர் எதார்த்தமாகத்தான் சொல்கிறார்.. அதை நிதி அமைச்சரும் ஸ்போட்டிவாகதான் எடுத்துக்கொண்டார். இதில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.  ஆனால் ஊடகங்கள் பெரிது பண்ணி உள்ளனர். அவரேதான் நிதி அமைச்சரே பார்க்க வேண்டும் எனக்கேட்டதாக சொல்லப்படுகிறது. இதை பூதாகரமாக திமுக, காங். ஆக்குகிறார்கள். என்ன பொறுத்தவரை இது எதார்த்தமான ஒன்றாகத்தான் பார்க்கிறேன் என்று பிரேமலதா தெரிவித்தார்.

 
விடுதலை சிறுத்தை கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு  இதுவரை அழைப்பு வரவில்லை என்றும் அழைப்பு வந்தால் ஆலோசிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். மகாவிஷ்ணு விவகாரம்  அவ்வளவு பெரிய விஷயம் கிடையாது என்று தெரிவித்த பிரேமலதா, ராஜ்ஜிய சபா சீட் தொடர்பான கேள்விக்கு, இவ்வளவு நாள் பொறுத்துவிட்டீர்கள், பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார்.