1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (17:38 IST)

காதல் திருமணம் செய்த இளைஞரை வெட்டிக் கொன்ற பெண் வீட்டார்!

Love
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞரை பெண் வீட்டார் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகேயுள்ள கிட்டம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்(28). இவர், அதேபகுதியைச் சேர்ந்த சரண்யா என்ற  பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரின் காதலுக்கும் சரண்யாவின் வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், இன்று மதியம் கே.ஆர்.பி அணை அருகில் ஜெகன் தன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது.,  மறைந்திருந்த ஒரு கும்பல அவரை சரமாறியாக அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தது.

இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் ஜெகன் உயிரிழந்தார். இந்தக் கொலையில், சரண்யாவின் குடும்பத்தினர் தான்  ஆட்களை ஏவி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.