சுற்றுச்சூழல் போராளி முகிலனைக் கண்டுபிடித்து தரக் கோரி கரூர் ஆட்சியரிடம் மனு
காணாமல் போன சூற்றுச்சூழல் போராளி முகிலனைக் கண்டுபிடித்து தரக் கோரி கரூரில் உள்ள பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முகிலன் முகமூடி அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சுற்றுச் சூழல் போராளி முகிலன். கரூரில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மணல் குவாரிகளை எடுத்து கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தவர் இதன் காரணத்தால் மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதுமட்டுமல்லாது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான போராட்டங்களை நடத்தினார். இந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினார். இந்த துப்பாக்கி சூடு சம்பந்தமாக பல ஆதாரங்களை வீடியோவாக கடந்த 10 தினங்களுக்கு முன்னர் முகிலன் அண்மையில் சென்னையில் செய்தியாளர்களிடம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன் பிறகு முகிலன் சென்னையிலிருந்து மதுரை செல்வதற்காக சென்னையில் ரயில் ஏறிய அவர் மதுரைக்கு வரவில்லை. முகிலன் எங்கு சென்றார் என்ற தகவல் தெரியவில்லை. இதையடுத்து, காணாமல் போன் முகிலன் குறித்து தமிழக அரசும், காவல் துறையும் இதுவரை எந்தவித விளக்குமும் அளிக்கவி்ல்லை.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள் முகிலனை கண்டுபிடித்து தர வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், சாமானிய மக்கள் நலக் கட்சி, அமராவதி சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று முகிலன் மூகமூடி அணிந்து வந்து காணாமல் போன முகிலனைக் கண்டுபிடித்து தரக் கோரி, மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் மனு அளித்தனர்.