ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 5 ஜூன் 2016 (10:28 IST)

மு.க.ஸ்டாலினுக்கு புதிய பதவி

மு.க.ஸ்டாலினுக்கு புதிய பதவி

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது
 

 
நடைபெற்ற தேர்தலில், திமுக 89 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் அக்கட்சி எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான முறையான கடிதத்தை சட்டசபைக்கு திமுக அனுப்யது.
 
இந்த நிலையில், சட்டசபை செயலாளர் அ.மு.பி.ஜமாலுதீன் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை, சபாநாயகர் அங்கீகரித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ள, மு.க.ஸ்டாலினுக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கடந்த முறை தமிழக எதிர்க்கட்சித் தலைவாரக விஜயகாந்த் இருந்தார். அந்தப பதவி தற்போது மு.க.ஸ்டாலின் வசம் வந்துள்ளது.
 
மு.க.ஸ்டாலினுக்கு அரசு கார், அரசு டிரைவர், தனிச் செயலாளர் போன்ற வசதிகள் அரசு சார்பில் அளிக்கப்பட உள்ளது.