திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 16 செப்டம்பர் 2021 (22:31 IST)

தமிழகம் வந்தார் புதிய கவர்னர். முதல்வர் நேரில் வரவேற்பு!

யார் இந்த  புதிய கவர்னர்  :ஆர்.என்.ரவி என்கிற ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி பிஹாரில் உள்ள பாட்னாவில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம், சில காலம் பத்திரிகைத் துறை பணி என இருந்தவர் கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஆகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். உளவுத்துறையிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
 
2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளைத் தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார்.பின்னர் அவர் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றினார். 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்து வருகிறார். தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்தில் பிரியா விடைபெற்று தமிழம் வந்த ஆளுநரை முதல்வர் நேரில் சென்று வரவேற்றார்.