ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 30 டிசம்பர் 2019 (20:41 IST)

அமேசான் டெலிவரியை பிரித்துப் பார்த்த ஊழியர்... வைரலாகும் வீடியோ

அமேசான், பிளிப்கார்டு, ஸ்னேப் டீல் போன்ற ஆன்லைன் வர்த்த நிறுவங்கள் எல்லாமே குறித்த தேதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பொருட்களை டெலிவரி செய்கின்றனர். இந்நிலையில், அமேசான் ஊழியர் ஒருவர் தன் கஸ்டமர் ஒருவரின் பார்சலை பிரித்துப் பார்த்த சம்பவம் வைரல் ஆகி வருகிறது.
தற்போது வைரலாகி வரும் வீடியோவில், அமேசான் ஊழியர் ஒரு  இடத்தில் நின்றுகொண்டு, வாடிக்கையாளரின் பொருட்களைப் பிரித்துப் பார்க்கிறார்.

அப்போது,அவ்வழியே வந்த ஒருவர், டெலிவரி செய்பவர்கள் இப்படி பொருட்களைப் பிரித்துப் பார்க்கலாமா ? எனக் கேள்வி கேட்டுள்ளார்.
 
அதற்கு ஊழியர் பொறுப்பில்லாமல்,இது உனது பார்சலா எனக் கேட்டு, அடாவடியாகப் பேசியதாகத் தெரிகிறது.
 
டெலிவரி பாயை கேள்வி கேட்ட நபர் அமேசானில் ரெகுலர் கஸ்டமர்  என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்குமான வாக்குவாதம் வைரல் ஆகி வருகிறது.