ஓடும் பேருந்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் !
தஞ்சை மாவட்டத்தில் அருகே ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் அடுத்த கோட்டாகுடி கிராமத்தைச் சேர்ந்த பெரியாச்சி என்ற நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியுடன் பேருந்து நிலையத்தில் நின்றிருந்தார்.
அப்போது அவ்வழியே தனியார் பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநர் பெரியாச்சியை பேருந்தில் ஏற்றிக்கொண்டு அரசு மருத்துவமனைக்குச் செல்ல முயற்சி மேற்கொண்டார்.ஆனால் பிரசவ வேதனையில் துடித்த அப்பெண் பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் பொழுது குழந்தையைப் பிரசவித்தார். அவருக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்தன.
இந்நிலையில் தற்போது தாயும் சேயும் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.