செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (10:07 IST)

ஆன்லைனில் போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு கொடுத்த நிறுவனம்...

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள்  பொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் வெற்றி ( 25). தனியார் ஓட்டலில் ஊழியராக பணியாற்றுகிறார். இவர் சில தினங்களுக்கு முன் ஆன்லைன் மூலம் தனியார் இணையதள முகவரியில் செல்போன் ஆர்டர் செய்துள்ளார். அதன் மதிப்பு ரூபாய். 8500 ஆகும். 
தன் இல்லத்தின் முகவரியை அவர் கொடுத்திருந்ததால் கூரியர் மூலம்  நேற்று முன் தினம் அவருக்கு ஒரு பார்ச்சல் வந்துள்ளது. அதை திறந்து பார்த்த வெற்றி அதிர்ச்சி அடைந்தார். ஆசையாக செல்போன் இருக்கும் என்று திறந்து பார்த்தவருக்கு சோப்பு கட்டி, செல்போன் சார்ஜர், ஹெட்செட் மட்டுமே இருந்துள்ளது கண்டு ஏமாற்றமடைந்தார்.
 
இந்நிலையில் தன்னை மோசடி செய்த நிறுவனத்தின் மீது புகார் செய்ய போவதாக வெற்றி கூறவே கூரியர்  ஊழியர் தான் வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்துள்ளார்.இதனால்  வெற்றி யாரிடமும் புகார் அளிக்கவில்லை என்று தெரிகிறது.