வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (18:33 IST)

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை ...மீட்பு பணி தீவிரம்

ராஜஸ்தான் மாநிலத்தில், 5 வயது குழந்தை ஒன்று  ஆழ்துளை கிணற்றில் விழுந்ததால் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஷிரோஹு என்ற மாவட்டத்தில் 5 வயது குழந்தை , வீட்டில் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தது.
 
குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். 
 
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
தற்போது, குழந்தைக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் சுரேந்திர குமார் மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து குழந்தை உயிருடன் மீட்க முயற்சி எடுத்து வருகிறார்.