வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (08:32 IST)

சாம்பியன்ஸ் ட்ராஃபியே இந்தியாவுக்கு சாதகமாக இருக்கு.. அவ்ளோ சொகுசு! - தென்னாப்பிரிக்க வீரர் கருத்து!

Rohit sharma

தற்போது நடந்து வரும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா வெற்றி பெற சாதகமான சூழல்கள் உள்ளதாக தென்னாப்பிரிக்க வீரர் வாண்டர் டுசன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுத்ததால், இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதனால் மற்ற அணிகள் இந்திய போட்டிக்கு துபாயிலும், மற்ற போட்டிகளுக்கு பாகிஸ்தானிலும் சென்று விளையாட வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலுமே வெற்றிப் பெற்றுள்ளது.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த தென்னாப்பிரிக்க வீரர் ராஸி வாண்டர் டுசன் “இந்திய அணி ஒரே ஹோட்டலில் தங்கி, ஒரே இடத்தில் பயிற்சி எடுத்து, ஒரே மைதானத்தில், ஒரே பிட்ச்சில் எல்லா போட்டிகளையும் விளையாடுவது என்பது அதற்கு சாதகமான சூழல்தான். இதை புரிந்துக் கொள்ள ராக்கெட் விஞ்ஞானியாக இருந்தாக வேண்டிய அவசியமில்லை” என விமர்சித்து பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K